சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?பெரிய பொண்ணா ஹீரோயின் மாதிரி அம்புட்டு அழகு!
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல குட்டி குழந்தைகள் பலரும் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர்.சிறு குழந்தைகளாக சினிமாவில் பார்த்தவர்கள் சில காலங்களிலேயே வளர்ந்து சினிமாவில் ஹீரோயின் களாக நடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அதனால் பட வாய்ப்பிற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி அதை சோசியல் மீடியாக்களில் தங்களது போட்டோஸை பதிவிட்டு வரவேர்ப்பினை பெற்று வருகின்றனர்.. அப்படி சிறுத்தை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ரக்ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா.இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் நடித்து இருப்பார்.
பையா படத்திற்கு பிறகு கார்த்தி மற்றும் தமன்னா காம்பினேஷனில் வெளியான “சிறுத்தை” திரைப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த திரைபடத்தில் இந்த குழந்தையின் கேரக்டர் மிகவும் முக்கியமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தில் கார்த்தி ரத்தினவேல் பாண்டியனாக முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார்.அவரது 5 வயது மகளாக மிகவும் அப்பாவியான கேரக்டரில் நடித்திருப்பார்.அந்த கதா பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக இந்த குழந்தை அமைந்திருக்கும்.
இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் பேபி ரக்ஷனா நடித்துள்ளார்.அண்மைய காலங்களில் அவர் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அழகு போட்டியில் ஒன்று கலந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,
Comments are closed.