அட நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாரா!?? எந்த படத்தில் எந்த காட்சியில் தெரியுமா!!

தமிழ் சினிமாவால் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஷால்.முன்னணி நடிகராக வலம்வரும் இவர் தற்போது தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தலைவராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார்.29 படங்களில் நடித்துள்ள விஷால் தற்போது சமீபத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆக்சன் திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் தற்போது அடுத்து அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை மிகவும் நம்பியுள்ளார் விஷால்.

இது மிஷ்கின் இயக்கத்தில் 2017ல் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.இதில் இவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.விஷால் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் செல்லமே என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் தற்போது அனைவருக்கு அதிர்ச்சிதரும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.அவர் முதன்முதலில் நடித்தது 1989ல் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஜாடிக்கேத்த மூடி திரைப்படத்தில்தான்.

இந்தப்படத்தை தயாரித்தது விஷாலின் தந்தை ஜிகே ரெட்டிதான்.அதனாலேயே இவருக்கு குழந்தை நட்சத்திரமாக இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சில நிமிடங்கள் மட்டும் நடிகர் பாண்டியராஜனுடன் இனைந்து நடனமாடி உள்ளார்.இந்த படத்தில் நடிக்கும்போது விஷாலின் வயது 6தான்.அதற்கு பிறகுதான் பல வருடங்கள் கழித்து செல்லமே திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது பல தடங்கலுக்கு பிறகு சினிமா உலகில் நிலைத்துநின்று கொண்டிருக்கும் விஷால் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments are closed.