பாண்டியன் ஸ்டோர் முல்லை திருமணம் !! அவரே வெளியிட்ட தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கதிர்- முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம், சமீபத்தில் கூட அவர் பெற்றோருக்கு 60வது திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்தார்.நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர், மொடலிங் என பன்முகத் திறமை கொண்ட சித்ரா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், நீங்க எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க? அப்படி பண்ணினால் அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அது காதல் திருமணமா? என கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சித்ரா, எனது திருமணத்திற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, அதற்குள் யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறார்களோ அவர்கள் சொல்லலாம் என கூறியிருந்தார்.சித்ராவின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Comments are closed.