அடேங்கப்பா..! – எதிர்நீச்சல் படத்தில் நடித்த நடிகை சுசா குமாரா இது..?- ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!

சினிமா உலகத்திற்கு தற்போது புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூடபிரபலமாகமாட்டார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமாகி விடுவார்கள்.அந்த வகையில், இளம் நடிகர் சுசா குமார் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் எதிர்நீச்சல், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் காதலியாக வருவார் இந்த சுசா குமார். மேலும், இவருக்கு “நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..” என்ற ஒரு பாடலும் படத்தில் இடம் பெற்று ஹிட் அ டித்தது.

இந்த பாடலில் அழகு பதுமையாக , பக்கத்துக்கு வீட்டு பெண் போல தோன்றி இளசுகள் மனதில் இடம் பிடித்தார் சுசா குமார். எதிர் நீச்சல் படத்தை தொடர்ந்து, அஜித், சிவா கூட்டணியில் உருவாகி வெளியான “வீரம்” படத்தில் செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான “மாணிக்” என்ற படத்தில் மா.க.பா ஆனந்திற்கு ஜோடியாக நடித்தார். அவ்வளவு தான் முடிந்தது அவரது சினிமா வாழ்க்கை. அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் இவருக்கு இல்லை. தற்போதும், நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று காத்திருக்கிறார்.

 

Comments are closed.