ஊரடங்கு நேரத்தில் கணவரை வி வாகரத்து செய்த இளம் நடிகை சிம்ரன்.!என்ன ஆச்சுனு பாருங்க.!

பிரபல சின்னத்திரை நடிகையான சிம்ரன் கன்னா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.மும்பையை பூர்விகமாக கொண்ட சிம்ரன் கன்னா, நடிகை, மாடல், இயக்குநர், பாடகி என பல்வேறு முகங்களை கொண்டவர்.
கிருஷ்ணாபென் கக்ரவாலா, உதான்: சப்னோ கி, மாதா கி சவுகி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.35 வயதான சிம்ரன் கன்னா , கடந்த 2000 ஆம் ஆண்டில் தனது காதலரான தொழிலதிபர் பரத் டுடானியுடன் டேட்டிங் சென்றார். அதன் பின் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு வினீத் கன்னா என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இருவரது உறவிலும் விரிசல் ஏற்பட்டது, இதுகுறித்து செய்திகள் வெளியானாலும் இருவரும் எதுவும் பேசாமல் இருந்தனர்.
இந்நிலையில் பரத்தை விட்டு விலகியிருந்த சிம்ரன் கடந்த 13ம் திகதி தனது கணவரை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.

தங்களுக்குள் ஏற்பட்ட இந்த பிரிவு இணக்கமானது என்றும், தங்களுக்கிடையில் எந்த விரோதமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மகன் வினித் அவரது தந்தையுடன் இருப்பதாகவும், அடிக்கடி சென்று தனது மகனை பார்த்துவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.