வி ல்லன் நடிகர் நம்பியாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோ கமா..! 3 ரூபாய் சம்பளத்திற்காக என்ன வேலை செய்தார் தெரியுமா?

எம்.என்.நம்பியார் தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தவர்.நேற்று முன்தினம் எம்.என்.நம்பியாரின் பிறந்த தினம். அவர் வாழ்க்கையில் வெற்றி பாதையை பிடிக்க அவர் கடந்து வந்த சோ கமான பயணங்கள் பல இருக்கின்றது.தமிழ் சினிமாவில் எத்தனையோ வி ல்லன்கள் வந்தாலும் யாராலும் மறக்க முடியாத வி ல்லன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.என்.நம்பியார்.இவரது வசனம், நடிப்பு இன்றளவும், எந்த வி ல்லன்களுக்கும் கிடையாது என்றே கூறலாம்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெருவமூர் என்ற ஊரில் கடந்த 1919ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி பிறந்தவர் எம்.என்.நம்பியார்.இவரது இயற்பெயர், மாஞ்சேரி நாராயணன் நம்பியார். இவரது பெற்றோர் – கெளு நம்பியார் – லட்சுமி அம்மாள்.

நம்பியாரின் 8ஆவது வயதில், தந்தை கெளு நம்பியார் இறக்கவே, கேரளாவில் வசித்து வந்த நம்பியார், ஊட்டிக்கு குடி பெயர்ந்தார். அங்குள்ள நகராட்சி பள்ளியில் 3ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சகோதரர் உதவியால், நாடகக் குழுவில் சேர்ந்த இவருக்கு முதலில் கிடைத்த வேலை சமையல் உதவியாளர்.அதன் பிறகு தொடர்ந்து சேலம், மைசூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு நாடக் குழுவுடன் இணைந்து பயணத்தைத் தொடங்கினார்.

நாடகக் கலையில், நடிப்புடன் பாட்டும், ஆர்மோனியமும் கற்றுக் கொண்டார். தனது 15ஆவது வயதில், நவாப் ராஜமாணிக்கம் அரங்கேற்றிய நச்சுப் பொய்கை என்ற நாடகத்தில் பெண் நீதிபதி வேடம் கிடைத்தது.

அதோடு, மாதம் 3 ரூபாய் சம்பளமும் கிடைத்தது. நவாபின் பக்த ராமதாஸ் என்ற நாடகத்தை முருகதாசா படமாக்கினார்.ஹீரோயினே இல்லாத இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் டிகே சாரங்கபாணி உடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் மாதண்ணாவாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் இந்த நாடகக் குழுவில் இருந்து சாரங்கபாணி விலக, அவரது நகைச்சுவை வேடங்கள் அனைத்துமே நம்பியாருக்கு கிடைத்தது. அதோடு, சம்பளமும் ரூ.15 ஆக உயர்ந்தது.

அதன் பிறகு சக்தி நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு, கவியின் கனவு என்ற நாடகத்தில் ராஜகுரு வேடத்தை ஏற்றுக்கொண்டு தனது வி ல்லத்தனத்தை காட்டினார்.

தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்சில் கம்பெனி நடிகராகச் சேர்ந்தார். அவருக்கு ஓவியர் மாதவன் பரிந்துரை செய்தார்.1946ல் நம்பியார் நடித்த முதல் படம் வித்யாபதி வெளியானது.

இப்படத்திற்காக தலையில் மொட்டை அடித்துக் கொண்டார் நம்பியார். இப்படம் வெளியான போதே உறவுக்கார பெண்ணான ருக்மணியை மணந்தார்.ராஜகுமாரி படத்தில் எம் ஜி ஆருடன் முதல் முதலாக இணைந்து நடித்தார். அதுவும், எம்ஜிஆருக்கு உதவும் பாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கஞ்சன், கல்யாணி, நல்ல தங்கை ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.வேலைக்காரி, திகம்பர சாமியார் ஆகிய படங்கள் நம்பியாரின் வாழ்க்கையை திசை திருப்பிய படங்கள்.

பிஎஸ் வீரப்பா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ் மனோகர் ஆகியோர் சூப்பர் டூப்பர் வி ல்லன்கள் இருந்தாலும், எம்.என்.நம்பியாரின் இடத்தை யாராலும் நிரப்பவும் முடியவில்லை, கைப்பற்றவும் முடியவில்லை.

காலங்கடந்து எத்தனையோ வி ல்லன்கள் வந்தாலும், எம்.என்.நம்பியாரின் வி ல்லத் தனத்தை மட்டும் யாராலும் கொடுக்கமுடியவில்லை. அவர் பேசும் வசனங்கள் ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.