மூன்றாவது திருமணம் குறித்து உண்மையை உடைத்த வனிதா! புது மாப்பிள்ளை என்ன செய்கிறார்னு தெரியுமா?

நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு திருமணம் நடக்கவுள்ளது உண்மைதான் என தெரிவித்துள்ளார்.பிக்பாஸ் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதினைக் கவர்ந்தவர் தான் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வருவதற்கு முன்பு இவரது தந்தையுடன் ஏற்பட்ட ச ண்டை பலருக்கும் இவரை வி ல்லியாகவே காட்டி வந்தது.பின்பு பிக்பாஸ் வந்த பின்பும் பலருக்கும் வில்லியாகவே மீண்டும் தெரிந்தார். பின்பு தனது மகள் உள்ளே வந்த பின்பு அவர் ஒரு தாயாக நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த ரசிகர்களிடையே ஒரு சிங்கப்பெண்ணாக மாற்றியது. ஆனால் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்தார். ஆம் 19 வயதில் 2000ம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த இவர் 2007ம் ஆண்டு அவரைவிட்டு பிரிந்தார். ஆகாஷிற்கும், இவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தது. பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வனிதா பின்பு ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். அவரையும் பிரிந்த வனிதா தற்போது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் வனிதாவின் திருமண அழைப்பு ஒன்று தீயாய் பரவியது. அதில் வரும் 27ம் திகதி மிகவும் எளிமையான முறையில் பீட்டர் பால் என்பவருடன் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த திருமணம் குறித்து வனிதா உண்மையை உடைத்துள்ளார். தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளது உண்மைதான் என கூறியுள்ளார். பீட்டர் பாலை வரும் 27ஆம் தேதி திருமணம் செய்கிறார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெறவுள்ளது. வனிதா திருமணம் செய்யவுள்ள பீட்டர் பால் ஒரு விஷ்வல் எஃபெக்ட் டைரக்டர் என்றும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பணி புரிந்திருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

 

Comments are closed.