தேவயானி தம்பி நகுல் மனைவி கர்ப்பம் வெளியிட்ட குடும்ப புகைப்படம் தேவயானி வீட்டில் இத்தனை பேரு சினிமாவில் இருக்காங்களா வாயடைத்துப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் நடித்த அணைத்து படங்களிலுமே மிகவும் குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் க வர்ச்சி காட்டியது கிடையாது.சினிமாவில் உயரத்தில் இருந்த தேவயானி தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார். அதன்பின்னர் படஙக்ளில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.

இந்த வகையில் நடிகை தேவயானியின் தம்பியும் இளம் நடிகருமான நகுலின் மனைவி கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வைரலாகி வருகின்றது.இது குறித்து நடிகர் மகிழ்ச்சியுடன் அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ”எனது இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல்.இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

 

உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.