ஒல்லிக்குச்சாக இருந்த தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நடிகர் கட்டழகான உடலுடன் மாஸான தோற்றத்திற்கு மாறியதெப்படி யார் என்று தெரிந்தால் ஷாக் அகிடுவீங்க

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார். இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். சில மாதங்கள் கழித்து இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றும் முடிந்தது.

இந்த நிலையில் கெட்டவன்னு பேரெடுத்தா நல்லவண்டா என்ற படத்தில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நின்று போய்விட்டது. இதனால் அவரும் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். தற்போது வீட்டில் இருக்கும் அவர் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்து மாஸ் லுக்கிற்கு மாறியுள்ளார்.

Comments are closed.