5ம் வகுப்பு படிக்கும் போதே தனது முதல் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான சாய்பல்லவி எந்த படித்ததில் என்ன காட்சி தெரியுமா

இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.

விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.அந்த படத்தில் கங்கனா ரனாவத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

Comments are closed.