தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை… பல லட்சம் பேரை கண் கலங்க வைத்த காட்சி!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆயிரம் காலத்து பயிரான திருமணம் இரு மனங்கள் மட்டும் இணையும் விழா அல்ல. இரு குடும்பங்களின் சங்கமம் அது.பெண்களின் திருமணம் என்றால் புதிதாக கிடைக்கப்போகும் உறவுகளை நினைத்து ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் மற்றொரு புறம் தன் பிறந்தவீட்டு சொந்தங்களை விட்டு பிரியும் வலியும் கட்டாயம் இருக்கும்.பெண் என்பவள் முதலில் பெற்றோருக்கு குழந்தையாகிறாள். பருவம் எய்தியதும் கன்னிப்பெண் என்னும் தகுதியை அடைகிறாள். திருமணம் முடிந்த உடன் மனைவி என்னும் ஸ்தானத்துக்கு வருகிறாள். தாய்மை அடையும் போது கர்ப்பிணி என்றும், குழந்தை பேறுக்கு பின்னர் அன்னை என்றும் தன் வாழ்நாளில் பல படிகளையும் கடந்து செல்பவள் பெண்.

ஆண்களை விட பல மடங்கு மனோதிடம் கொண்டவர்கள் பெண்கள். ஆம்…உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்து பாரினுக்கும், வெளியூர்களுக்கும் வேலைக்கு சென்ற நபர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களில் பலரும் உணவு பிடிக்கவில்லை. அங்கு சூழல் சரியில்லை என திரும்பி வந்திருப்பார்கள். இப்போது ஒரு பெண்ணை நினைத்துப் பாருங்கள். உணவு, வாழ்சூழல் என அனைத்திலும் முற்றாக மாறுபட்ட ஒரு குடும்பத்துக்குள் சங்கமிக்கிறாள் பெண். ஆனால் பெண் அந்த வாழ்சூழலுக்குள் வாழ பழகிக் கொள்கிறாள். உணவு கலாச்சாரத்துக்கு புகுந்த வீட்டுக்கு ஏற்ப மாறிக் கொள்வதோடு, அவளே அமைத்து அந்த கலாச்சார உணவை பந்தியும் வைக்கிறாள்.

பெண் குழந்தைகள் வீட்டின் செல்வங்கள். அதனால் தான் இந்த பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்யும் போது, இன்னொரு வீட்டுக்கு வாழச் செல்லும் பெண்ணை மகாலெட்சுமியாக வைத்து கொண்டாடுவார்கள்.

இங்கு புதிதாக திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண் தன் உடன் பிறந்த அண்ணன் மீது வைத்த பாசம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தங்கையின் அழுகையை பார்த்த அண்ணன் அழுகையை அடக்கமுடியாமல் அவரும் கண்கலங்கியுள்ளார். இது குறித்த காட்சி முகநூலில் நூறு லட்சம் பேர் அவதானித்துள்ளனர்.

Comments are closed.