இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் முன்பை விட இருமடங்கு உடல் எடை அதிகரித்திருக்கும் நடிகை சினேகா வைரலாகும் வீடியோ!!

274

இன்றளவும் மவுசு குறையாத ஒரு வெள்ளித்திரை காதல் ஜோடி என்றால் சினேகா பிரசன்னா ஜோடி தான்.என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை சினேகா. தமிழ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடனும் இணைந்து நடித்தார்.இவர் பெரும்பாலும் கவர்ச்சி இல்லாமல் குடும்ப பாங்கான கதா பாத்திரத்திலேயே நடித்திருப்பார்.இதனாலேயே இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சிநேகா ஜோடி இருவரும் சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர்..அதைத் தொடர்ந்து சினேகா மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கர்ப்பமானார்.

ஏற்கனே சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த ஜோடிக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரசன்னா, ‘தங்கள் மகளுக்கு ஆத்யந்தா என்ற பெயர் வைத்துள்ளோம். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள் என்பது பொருள். முதல் குழந்தை பெண்ணாக பிறக்கும் என்று நினைத்து ஆத்யாஎன்ற பெயரை தேர்வு செய்து வைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்து இருப்பதால் அதே பெயரை கொஞ்சம் மாற்றி ஆத்யந்தா என வைத்து விட்டோம்’ என கூறியுள்ளார்

இந்த நிலையில் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில் சினேகா ஒரு சிறிய விளம்பர படத்தில் நடித்துள்ளார் அதில் அவர் முதல்ல இருந்ததை விட இரு மடங்கு உடல் பருமன் அதிகரித்துள்ளார்
தற்போது இந்த வீடியோவில் காணலாம்

Comments are closed.