படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் மனைவியுடன் ரொமான்ஸுடன் ஜெயம் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.
சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உருவாக்கி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் ஜெயம் ரவி.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

ரீலில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் காதல் மன்னன் தான் என்பதை ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் கிளிக்ஸ் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

இந்நிலையில், ஆர்த்தி சமூக வலைத்தளங்களில் கலர்புல்லான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது ஜெயம் ரவியும், ஆர்த்தியும் சேர்ந்து வெளிநாட்டு சென்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.