தமிழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக மகனுக்கு பெயர் வைத்த நடிகர் சிபிராஜ்! தீயாய் பரவும் ட்விட்

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் மகன்தான் சிபிராஜ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 2003 ஆம் ஆண்டு, இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவானார் நடிகர் சிபிராஜ்.
அதன்பின்னர் ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் போன்றபடங்களில் நடித்துள்ளார் சிபிராஜ். கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ரங்கா, மாயோன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார் சிபிராஜ்.இந்நிலையில் சிபிராஜுக்கும், ரேவதி என்ற பெண்ணிற்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ரேவதி சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சிபிராஜும், ரேவதியும் திருமணத்திற்கு முன்பே சுமார் 10 வருடம் நண்பர்களாக இருந்தவர்கள். இந்த வகையில் தற்போது பிறந்து பிள்ளைக்கு நடிகர் சிபிராஜ் வைத்த பெயர் குறித்து பெருமைப்படுவதாக பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் சு தந்திரப் போ ராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போ ராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எ திராக போ ராடி வீர ம ரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போ ராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அவரின் தமிழ் பற்றை எண்ணி வாழ்த்து கூறியுள்ளனர்.
இதேவேளை, குறித்த ட்விட் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

Comments are closed.