இயக்குனர் ஏ.எல். விஜய்யின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து

சினிமா தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இரண்டாவது மகன், விஜய். அஜித்தின் ‘கிரீடம்’ படம் மூலம் டைரக்டராக அறிமுக மான இவர், தொடர்ந்து, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வதிருமகள்’,’தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உட் பட சில படங்களை இயக்கினார். இப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை ’தலைவி’ என்ற பெயரில் படமாக்கியிருந்தார்இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ படங்களில் ஹீரோயினாக நடித்த அமலாபாலை காதலித்து, 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதன்பின் ஐஸ்வர்யா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் விஜய்.

இந்நிலையில் இன்று அனைவரும் சந்தோசம் அளிக்கும் வகையில் இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதற்காக ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Comments are closed.