80 கலக்கி இப்போ 50 வயதில் எப்படி வெர்க் அவுட் பண்றாங்க பாருங்க அமலா, செம்ம வீடியோ இதோ

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து பணத்தேவையை நிறைவேற்றினாராம் நடிகை அமலா.கடந்த 1986ஆம் ஆண்டு தமிழில், இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் ‘மைதிலி என்னை காதலி’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா.ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும், மகளாக பிறந்தவர் நடிகை அமலா. இவருடைய தந்தை ஒரு கடற்படை அதிகாரி.
எனவே அ டி க் கடி பல ஊர்களுக்கு செல்ல நேர்ந்ததால் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தொடர முடிவு செய்து ஹொஸ்டலிலும் தங்கினார்.

இதற்கிடையே அமலாவின் தாய், தந்தைக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிரந்தரமாக பிரிய பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுள்ளார். சாப்பாட்டுக்கே கூட வ ழியில்லாமல் போக பின் சில இடங்களில் வேலை செய்து கொண்டே, நடனம் மீது கவனம் செலுத்தினார்.

நடன நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தன்னுடைய செலவுகளை பார்த்து கொண்டார். பின் இவருடைய அழகும், நடன திறமையும் இவருக்கு ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றுத் தர தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமானார்.முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்த இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அகில் என்கிற மகன் இருக்கிறார்.

மேலும் நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் மகனான நாக சைதன்யாவையும் எவ்வித பாகுபாடுமின்றி பாசம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் தற்போது 50 வயதை கடந்தும் தன்னுடைய ஆரோக்கியத்தை பேணிக் காக்க Work Out செய்யும் வீடியோ ரசிகர்களை இன்ப அ தி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments are closed.