பிரபலமான நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மகன் இவ்வளவு பெரிய நடிகராக இவ்வளவு நாள் தெரியாம போச்சே

மேஜர் சுந்தரராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரராஜன் (மார்ச்சு 1, 1935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.இந்த நிலையில் ஒரே வசனத்தை ஆங்கிலம், தமிழ் என மாறி மாறி பேசி புகழ் பெற்றவர் மேஜர் சுந்தர்ராஜன். இவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நடித்து வருகின்றார்.

இவருடைய மகன் கௌதம் சுந்தர்ராஜனை முன்பு சினிமா பார்த்த பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால், தற்போது இணைய உலகத்தில் மிதக்கும் இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அவரை பற்றி சொன்னால் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்துவிடும்.

நாளைய தீர்ப்பு, இருவர், ஆம்பள தற்போது செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்துள்ள கௌதம் சுந்தர்ராஜன் தான் மேஜர் சுந்தர்ராஜன் மகன். இவர் நடிகர் மட்டுமின்றி கண்ணுல காச காட்டுப்பா என்ற படத்தை இயக்கியும் உள்ளார், அதை விட இவர் சிறந்த நடன இயக்குனரும் கூட.

Comments are closed.