அழகு தேவதையாக இருக்கும் காதல் பட சந்தியாவுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

தமிழில் வெளியான காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. அந்த படத்திலிருந்து இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைக்க தொடங்கினர். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. காதல் திரைப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தார் காதல் சந்தியா. ஆனால் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இந்நிலையில் போன சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சந்தியா. இந்நிலையில், பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் எனப்படும் மன அழுத்த பிரச்னை குறித்து பேசியுள்ளார் சந்தியா. பிரசவத்திற்கு பிறகு தானும் அந்தச் சிக்கலை எதிர்கொண்ட விதம் குறித்துப் பகிர்கிறார், நடிகை ‘காதல்’ சந்தியா. என் மகள் ஷேமாவுக்கு ரெண்டரை வயசாகுது. பிரசவத்துக்குப் பிறகு, எனக்கு போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னை ஏற்பட்டுச்சு.

இது இயல்பான பிரச்னைதான். ரொம்ப கவலையும் வ லியும் இருக்கும். காரணமே இல்லாம தினமும் ஒருமுறையோ, சிலமுறையோ அழுகை வரும். அப்போதெல்லாம் கவலை தீர அழுதுடுங்க. உங்க உணர்வைப் பிறரால் புரிஞ்சுக்கிறது கடினமா இருக்கலாம். அதற்காக விரக்தி அடையாதீங்க. இதுக்காக வருத்தப்படாதீங்க. கொஞ்ச காலம் சிரமா இருந்தாலும், அதை எதிர்கொண்டு, குழந்தையை நல்லபடியா பார்த்துக்கோங்க’னு சொன்னார். கிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் மாலை 5 – 7 மணி வரை அ ழுவேன். இயல்பா அந்த நேரத்தில் அழுகை வந்திடும்.

போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னையால் நான் அடைந்த வேதனையும் வலியும் ரொம்ப கடினமானது. என் குடும்பத்தினர் என் நிலையைப் புரிஞ்சுக்கிட்டதால், ரொம்ப சப்போர்டிவா இருந்தாங்க. கொஞ்ச காலம் கழிச்சி அந்தப் பிரச்னை தானாகவே சரியாகிடுச்சு. அப்புறம், எனக்குத் தெரிஞ்ச தாய்மார்களுக்கு இந்தப் பிரச்னையைப் பற்றி ஆலோசனை கொடுக்க ஆரம்பிச்சேன். போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னைப் பற்றி விழிப்பு உணர்வு அதிகரிக்கணும். அந்த நேரத்தில் பெண்களுக்குக் குடும்பத்தினர் சப்போர்டிவா இருக்கணும்” என்கிறார் சந்தியா.

Comments are closed.