ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்த வின்னர் பட தயாரிப்பாளர்? அ திர்ச்சியில் ரசிகர்கள்….! அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

வின்னர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதனை ‘மதர் இந்தியா மூவீஸ் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் சார்பில் ராமச்சந்திரன் தயாரித்திருந்தார்.இந்த படம் தயாரிப்பாளர் ராமச்சந்திரனுக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லையாம்.இதனால் அவர் தென்காசியில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் நிலைமைக்கு தள்ளப்பட்டாராம்.

அந்த சூழ்நிலையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் அவரை சந்தித்து பேசியிருக்கிறார். பின், அந்த பத்திரிக்கையாளரிடம் ராமச்சந்திரன் தனது நிலைமையை விவரித்து பிரபல நாளிதழுக்காக ஒரு இன்டர்வியூ கொடுத்திருக்கிறார்.

அந்த இன்டர்வியூவை படித்த பிரபல இயக்குநர் பாலா, ராமச்சந்திரனை அழைத்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பினை வழங்கினார்.
அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்த பிறகு இப்போது கடன் தொ ல்லையிலிருந்து மீண்டு வந்து விட்டாராம்.

ராமச்சந்திரன் ‘வின்னர்’ படம் பற்றி பேசுகையில் “இந்த படத்துல இடம்பெற்ற காமெடி காட்சிகளுக்கு மட்டும் ராயல்டி மூலம் எனக்கு பணம் வந்திருந்தது என்றால், நான் தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அதெல்லாம் இல்லாமல் போய் விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.