கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பச்சையின் தற்போதைய நிலை…!! எப்படி இருந்த பையன் இப்படி ஆயிட்டாரே…!!

‘ஸ்கூல் Days இந்த பலகையை உடை’ என்ற பாடலை எந்த 90’s கிட்ஸ் மறப்பான் ? ஒரு குடும்பத்தில் என்னதான் சண்டையாக இருந்தாலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள், சீரியலை காண மொத்த குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து விடும். ‘கனா காணும் காலங்கள்’ன் வெற்றியால் விஜய் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் இந்த ஆண்டு பசங்களுக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. 2006 – இல் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் தொடர் மட்டும் தான். அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர். இதில் கதாநாயகியாக பிரபல நடிகையும் அட்லியின் மனைவியுமான பிரியா அறிமுகமானார்

இந்த சீரியலில் நடித்த நடிகர்களை மறந்திருக்க முடியாது. இதன் மூலம் அறிமுகமான அவர்கள் எல்லோரும் இன்று ஒரு நல்ல நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.

பச்சை என்கிற பச்சையப்பன் கதாபாத்திரம் பலருக்கும் நினைவிருக்கும், அந்த கதாபாத்திரத்தோடு தன்னை நினைத்து பார்க்க முடியும். இவரது உண்மையான பெயர் வாசுதேவ கிருஷ் மதுசுதன் என்பதாகும். இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஜோடி நம்பர் ஒன்னில் ஹேமா என்கிற பெண் உடன் நடனம் ஆடினார்.

அதன் பிறகு விஜய் டிவி தத்துப்பிள்ளை ஆகிவிட்டார். ஆபிஸ் என்ற ஒரு சீரியலில் நடித்தார். அதன் பிறகு, கனா காணும் காலங்கள் இர்ஃபான் ஹீரோவாக நடித்த சுண்டாட்டம் என்ற படத்தில் வில்லனாக நடித்தார் பச்சை. இப்போது பட வாய்ப்புகளுக்காக ” I Am Waiting ” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நம்ம பச்ச.

Comments are closed.