நடிக்க வருவதற்கு முன் நடிகை சமந்தா என்ன வேலை செய்து வந்துள்ளார் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார் சமந்தா.
இதையடுத்து, இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என்ன வேலை பார்த்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

4 வயதில், பெரிய பெரிய திருமணங்களில் திருமணத்திற்கு வருவோரை கையில் பூச்செண்டு வைத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்கும் வெல்கம் கேர்ள்-ஆக வேலை பார்த்துள்ளார் சமந்தா.
இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுபோன்ற ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஓன்று தற்போது வைரலாகி வருகிறது.

Comments are closed.