இந்த சீரியல் நடிகைக்கு திருமணமாகி 4 வருடத்தில் விவாகரத்தா?.. இதுதான் காரணமா!

தமிழ் சினிமாவில் வேற்று மொழிகள் பேசும் நடிகைகளையே தமிழ் படங்களை அறிமுகம் செய்யும் நிலை தற்போது வந்துள்ளது. அதேபோல வெள்ளித்திரையிலும் மலையாளம், தெலுங்கு நடிகைகளையே கதாநாயகிகளாக அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் தெய்வம் தந்த வீடு, `அவளும் நானும்` என்ற சீரியலில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்செண்ட் மலையாளத்தில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக நடித்து அதன்பின் சீரியல் நடிகையானார். அதன்பின் தமிழ் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறார்.

இதையடுத்து, டான் டோனி என்பவருடன் கடந்த 2017ல் திருமணமானது. திருமணத்திற்கு பிறகு சில காலம் இடைவெளிவிட்டு நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் சில காரணங்களால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். இதற்கு காரணம் மேக்னா சீரியல்களில் நடிக்க மற்ற மாநிலமான தமிழகத்திலேயே நேரத்தினை செலவிடுவதால் தான் என்று கூறப்படுகிறது.

தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சமரசமாக கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர். திருமணமாகி 4 ஆண்டுகள் கூட நிறைவுபெறாத நிலையில் நடிகை மேக்னா விவாகரத்தானவரா? என்று அதிர்ச்சியடைந்தனர்.

Comments are closed.