இளம்பெண்களின் கனவுக்கண்ணன், காதல் மன்னன் பங்களாதேஷ் சூப்பர்ஸ்டார் பெண்களுடன் அசத்தலான நடனத்தை பாருங்க

19

இன்டர்நெட்டில் நாம் நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு பிரபலத்தை நீங்கள் கண்டிருக்கவே முடியாது. கல்பனா அக்கா, மண்ணை சாதிக்கில் துவங்கி சித்ரா கஜோல் வரை பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்-அப் என தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள்.இவர்கள் எல்லாம் டப்ஸ்மேஷ், ஆடல், பாடலில் மட்டும் தான் வல்லவர்கள். ஆனால், அண்ணன், கன்னிகளின் காதல் மன்னன் எங்கள் ஹீரோ அலாம் இவர்களுக்கு எல்லாருக்கும் மேல் ஒரு டாப் ஸ்டார். இவர் நடிப்பு, சண்டை காட்சி, டான்ஸ், செண்டிமெண்ட் என்று அனைத்திலும் இறங்கி அடிக்கும் வித்தை கற்ற கில்லாடி.

பெரும்பாலும் இவரை நீங்கள் ஃபேஸ்புக் பதிவுகளில் கண்டு ரசித்திருக்கலாம். ஆனால், இவரை பற்றிய உண்மை விபரங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இதோ… ஹீரோ அலாமின் வரலாறு, புவியியல், வேதியல் அனைத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.

இவரது முழுப்பெயர் அஷ்ரபுல் அலாம் சாயித். ஆனால், இவரை ஹீரோ அலாம் என்று கூறினால் தான் சமூக வலைதள உலகிற்கு தெரியும். கருப்பும் அழகு, கருப்பாக இருந்தாலும் பெண்களை ரசிப்பார்கள் என்பதை சமூக வலைதள உலகிற்கு எடுத்துரைத்த மகா கலைஞன் தான் ஹீரோ அலாம்.

இப்போது யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் தனது ரசிகர்களை தொடர்பு கொண்டு வரும் ஹீரோ அலாம் வங்காள தேசத்தில் இருக்கிறது. போக்ரா அருகே இருக்கும் எருலியா என்ற ஊரில் தான் வசித்து வருகிறார்.

ஒருபுறம் நிறைய அழகான இளம் பெண்களின் காதல் நாயகனாக வீடியோக்களில் தோன்றும் ஹீரோ அலாம். மற்றொருபுறம் யூடியூப்பில் ஒரு முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார்.

கோலிவுட், பாலிவுட்டிலேயே சில பெரும் புள்ளிகள் தங்கள் வீடியோக்களுக்கு மில்லியன் பார்வைகள் கிடைக்குமா என்று சந்தேகித்து கொண்டிருக்கும் போது. ஹீரோ அலாமின் வீடியோக்கள் அசால்ட்டாக மில்லியன் பார்வைகள் பெறுகின்றன.

Comments are closed.