சுடுகாட்டில் குவியல் குவியலாக இருந்த பொருள் !! அள்ளி கொண்டு வீட்டுக்கு சென்ற மக்களுக்கு ஏற்பட்ட அ தி ர்ச்சி !! புகைப்படம் இதோ !!

தமிழகத்தில் சுடுகாட்டில் குவியல் குவியலாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருந்தை பார்த்த மக்கள் அதை போட்டி போட்டு கொண்டு அள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.பல்வேறு தரப்பினர் வேலையின்றி உள்ளனர், அதிலும் குறிப்பாக தொழிலாளிகள், விவசாயிகள் வறுமையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் போடி சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக அரிசி மூட்டைகள் கிடந்ததுடன், அரிசி கொட்டப்பட்டும் கிடந்தது.

பிரிக்காத அரிசி மூட்டைகள் ஒரு பக்கமும், குவியலாக அரிசி ஒரு பக்கமும் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அ திர்ச்சி அடைந்தனர்.
பிறகு இந்த தகவல் அக்கம் பக்கம் பகுதிகளிலும் பரவிய நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சுடுகாட்டுக்கு வந்து அரிசிகளை வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.

 

ஆனால் பின்னர் தான் அந்த அரிசியில் புழுக்கள் இருந்ததும், கெட்டுப் போய் இருந்ததும் தெரிந்து மக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்தது.இருந்தாலும் மொத்தமாக ஆளாளுக்கு அள்ளி கொண்டு போனார்கள், சுடுகாட்டில் ரேஷன் அரிசியை கொட்டியவர்கள் யார் என தெரியவில்லை.

இது சம்பந்தமாக தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

 

Comments are closed.