பிறந்த நாளில் காதல் கணவர் கொடுத்த கிஃப்ட்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்!அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா.?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை, 8 ஆண்டுகளாக காதலித்து, 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர்.அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, “சூப்பர் டீலக்ஸ்” படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார். பல நடிகைகளை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுக்கிவிடும் நிலையில், பெரிய இடத்து மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சமந்தா காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த நாக சைதன்யா தனது வீட்டிலேயே சமந்தாவிற்காக சாக்லெட் கேக் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கணவர் மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த த்ரிஷா, அனுபமா, ரெஜினா கசாண்ட்ரா, பார்வதி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கணவரின் அன்பு மழையோடு சேர்த்து, வாழ்த்து மழையிலும் மகிழ்ச்சியாக நனைந்து வருகிறார் சமந்தா.

 

 

View this post on Instagram

 

Family ❤️ …. (no points for guessing what I am praying for )

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Comments are closed.