கொரோனாவால் உ யிரிழந்த கணவன்..! க டைசியாக அவரை பார்க்க ஓடோடிச் சென்ற ம னைவிக்கு மொபைலில் இருந்த செய்தி.!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கணவனைக் காண அவரது மனைவி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தபோது மனைவியால் தனது கணவனை உயிருடன் பார்க்க முடியவில்லை. ஆனால், தான் இறந்துவிடுவோம் என்பதை அறிந்துகொண்ட அந்த கணவன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் தன் மொபைல் போனில் தனது பிரியாவிடை செய்திகளை பதிவிட்டு சென்றுள்ளார். அமெரிக்காவின் Connecticut பகுதியை சேர்ந்தவர் John Coelho . 32 வயதான ஜான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனில்லாமல் ஜான் இம்மாதம் 22ஆம் தேதி உயிர் இழந்தார்.  கணவன் உயிருக்கு போராடும் அதே நேரத்தில், உடம்பு சரியில்லாத தனது மகனை பார்த்துக்கொள்ள ஜானின் மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். இருப்பினும், கடைசி நிமிடத்தில் எப்படியாவது தனது கணவனுடன் நேரத்தை செலவிடவேண்டும் என ஆசைப்பட்டு ஜானின் மனைவி Katie (32) மருத்துவமனைக்கு ஓடோடி வந்துள்ளார். ஆனால் அவரால் ஜானை உயிருடன் பார்க்க முடியவில்லை.

கணவனை உயிருடன் பார்க்கமுடியாத சோகத்தில், அவரது பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்த Katie தனது கணவனின் தொலைபேசியை பார்த்துள்ளார். தொலைபேசியை திறந்துபார்த்த Katie க்கு கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. காரணம் ஜான் இறப்பதற்கு முன் தனது மனைவிக்கும், அன்பு பிள்ளைகளுக்கும் பதிவிட்டிருந்த அந்த குறுந்தகவல்கள்தான் காரணம்.

அந்த செய்தியில், நான் உங்களை என் முழு இதயத்தோடும் நேசிக்கிறேன், நீங்கள் எனக்கு மிகச் சிறந்த ஒரு வாழ்க்கையைக் கொடுத்தீர்கள். Katie நான் சந்தித்ததிலேயே நீதான் மிகவும் அழகான, அருமையான பெண். நம் மகன் Braedyn க்குச் சொல், அவன்தான் எனது மிகச்சிறந்த நண்பன் என்று, அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

நம் மகள் Penelope இடம் சொல், அவள் ஒரு இளவரசி என்று, அவள் வாழ்க்கையில் என்னவெல்லாம் ஆசைப்படுகிறாளோ அவை எல்லாம் அவளுக்கு கிடைக்குமென்று சொல். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, உன்னையும் நம் பிள்ளைகளையும் நேசிக்கும் ஒருவரை நீ கண்டுபிடித்தால் அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று ஜான் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தகவலை பார்த்ததும் ஜான் மனைவி மட்டும் இல்லை, தனது குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் துளிகளை பார்க்க முடிகிறது.

Comments are closed.