தங்கை தம்பியின் புகைப்படத்தினை வெளியிட்டு சர் ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தொகுப்பாளினி டிடி! வாயடைத்து போன ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் அந்த டிவியில் ஒளிபரப்பான அதிகப்படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவை அனைத்தும் வெற்றி அடைந்தது. அதில் முக்கியமானவை ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித்த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் கூட என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இவரது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டிற்குள் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

டிடி அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான ஓட்டுநராக இருப்பதாக கூறி அவரின் தம்பியின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தன.ஆனால், உண்மையில் டிடியின் சகோதரர் விமான ஓட்டுநர் தானா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

அதனை தெளிவுபடுத்தும் விதமாக உலக பைலட் தினத்தை முன்னிட்டு டிடி மீண்டும் சகோதரர் விமான ஓட்டுனர் உடையில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.அதில் எங்கள் வீட்டில் இரண்டு பைலட் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே அவரின் இரண்டு சகோதரர்களும் விமான ஓட்டுநர் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Comments are closed.