செம மார்டனாக மாறிய நாதஸ்வரம் சீரியல் நாயகியா! ஹீரோயின் மாதிரி இருக்கீங்க என வர்ணிக்கும் ரசிகர்கள்

சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். தினம் தோறும் இல்லங்களுக்குள் வரும் சீரியலின் வழியாக மக்கள் மனதில் இவர்கள் வெகுவாகவே இடம்பிடித்துவிடுகிறார்கள். அந்தவகையில் நாதஸ்வரம் சீரியலின் நாயகி ஸ்ரித்க்கா. சன் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஓடிய சீரியல் நாதஸ்வரம்.

இதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரித்திகா, தொடர்ந்து கல்யாணப்பரிசு, குலதெய்வம் சீரியல்களிலும் நடித்தார். இவர் இதற்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். சன், ஜீ, ஜெயா, கலைஞர், ராஜ் என பல தொலைக்காட்சிகள் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு, நடிகர் தனுஷின் தங்கையாக வேங்கை போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்ரித்திகா.

அண்மையில் இவருக்கு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சீரியல் பக்கம் கொஞ்சம் கவனத்தை குறைத்தார். இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே போட்டோ சூட் எடுத்துள்ளார் அம்மணி. அதை ஸ்ரித்திக்கா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செம மாடர்னாக இருக்கிறார் ஸ்ரித்திகா. அதைப்பார்த்த ரசிகர்கள் கல்யாணமாகி ஆளே மாறிட்டீங்களே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Comments are closed.