90’ஸ் கிட்ஸ்களின் உயிர்மூச்சு சக்திமான் – இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா தனிமையில் ப ரி தா பமாக தவிக்கும் சூப்பர் ஹீரோ
90-களில் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறதோ இல்லையோ. நிச்சயம் சக்திமான் ஸ்டிக்கர்கள் சுவர், பீரோ, ஜன்னல் என எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும்.சக்திமான் பெயரைச் சொல்லியே பல பிராண்டுகள் கல்லாக் கட்டிக் கொண்டிருந்தன.’சக்தி சக்தி சக்திமான்’ என்று வாராவாரம் தூர்தர்ஷனில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்த தொடர் சக்திமான்.அக்காலத்தில் இந்தத் தொடரை விரும்பாத குழந்தைகளே இல்லை எனலாம். அந்தளவிற்கு சுண்டுவிரலால் அனாயசமாக பூமி, சூரியனைத் தூக்கி சிறுவர்களை சக்திமான் குஷிப்படுத்தினார். ஆனால், இந்த தொடர் ஏற்படுத்திய தாக்கத்தால் உயரமான கட்டடங்களில் இருந்து தன்னை சக்திமான் காப்பற்ற வருவார் என குதித்து இறந்த சிறுவர்களின் சோகக்கதையும் உள்ளது
மீண்டும் சக்திமான் தொடரை எடுக்க விரும்புகிறீர்களா..? என முகேஷ் கண்ணாவிடம் கேட்டால் இப்போது உள்ள டெக்னாலஜியை வைத்து பாகுபலிக்கே சவால் விடுற அளவுக்கு சக்திமானுக்கு புதுப்புது விஷயங்கள்ல அப்டேட் ஆகணும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா, நிச்சயம் சக்திமான் ரீ-எண்ட்ரி கொடுப்பான் என்கிறார்.
தற்போது, அகில இந்திய அளவில் இயங்கி மக்களிடம் தொடர்ந்து ஆதரவை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ள இவர் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சேகரிக்க வேனை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். மேலும், அரசுக்கு அவ்வபோது அறிவுரைகள் மற்றும் யோசனைகளையும் வழங்கி வருகிறார்.
Comments are closed.