நயன்தாரா டம்மி தான் உண்மையான அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா?? அவங்களும் நடிகைதான் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

சினிமா, சீரியல், ஆர், ஜே, டப்பிங் வாய்ஸ் என பல திறமைகளை கொண்டிருப்பவர் தான் தீபா வெங்கட். இவர் அரவிந்த்சாமி, ரேவதி நடித்த பாசமலர்கள் திரைப்படத்தின் மூலம் திரை வாழ்க்கையத் தொடங்கினார்.
மேலும், சினிமா, சீரியல்கள் என சப்போர்ட்டிங் ரோலில் நடுத்து வந்த இவர், 9 ஆண்டுகளாக ஆர்.ஜே-வாகவும் பணியாற்றி வந்தார். சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் மக்களை கவர்ந்தார்.

முக்கியமாக முன்னணி நடிகைகளாக வலம் வரும், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கு பல படங்களுக்கு போல்டான குரல் கொடுப்பதும் இவர்தான். மேலும், சிறந்த நடிப்பிற்காக 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தார்கள்.

இவர் மெயின் ஹூன் ரகவாலா என்ற ஹிந்தி திரைப்படத்தில் குரல் கொடுக்கும் குழந்தை நட்சத்திரமாக குரல் நடிகையாக அறிமுகமானார். இவர் ஹலோ எப். எம் என்ற வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். இதில் மூன்றாம் பார்வை என்ற நிகழ்ச்சியை நிகழ்த்துகிறார். 44 வயதாகும் இவர், ஐ.டி-யில் வேலை செய்யும் கணவர், 2 குழந்தைகள் என குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார் தீபா.

Comments are closed.