சேலை கட்டி குடும்ப பொண்ணாக வந்த சௌந்தர்யாவா? வைரல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ

கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 22, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரை ஹோம் மூவி மேக்கேர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பூர்ணிமா, சஞ்சீவ், லீஷா மற்றும் சாம்பவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சதாசிவம் பெருமாள் (முன்னர்) எஸ். என். சக்திவேல் (தற்பொழுது) என்பவர் இயக்குகின்றார்.

இத்தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார் லீசா எக்லெர்ஸ். சௌர்ந்தயா கதாபாத்திரத்தில் துருதுருப் பெண்ணாக பொறுப்பான மனைவியாக இன்றைய இளசுகளை கவர்ந்து விட்டார்.எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லீசாவுக்கு ரசிகர்களும் அதிகம்.

இந்நிலையில் சாமி படத்தில் விக்ரம்- த்ரிஷாவின் அசத்தலான நடனத்தில் வெளிவந்த “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் வீடியோவைப் பார்த்த பலரும் லீசாவின் நடனத்தைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.

Comments are closed.