பிக் பாஸ் கணேஷ் குட்டி தேவதையுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா? மிரண்டு போன ரசிகர்கள்…. அம்புட்டு அழகு!

தொலைக்காட்சிகளில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. மக்களை கவரும் வகையில் பல விதமான நிகழ்ச்சிகளை நெறய தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. மேலும் அந்த நிகழ்ச்சிகளுக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுவது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான். இந்நிலையில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் இருந்தவர் நிஷா.

பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளாராகவும், நடிகராவும் இருந்த கணேஷ் வெங்கட் ராமனை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் அபியும் நானும் படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஜோடியாக இவர் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார். பின் நிஷா கர்ப்பமானார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் அவர் டிவி சானல் மற்றும் சீரியலிருந்து சில நாட்கள் ஓய்வு பெற்றுள்ளார்.

அவ்வப்போது குழந்தையுடன் புகைப்படத்தை தம்பதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவர்கள் இருவரும் ரசிகர்களின் பார்வையை ஈர்த்துவிடுவார்கள். இந்நிலையில் தற்போது அப்பாக்கள் தினம் என்பதால் வெங்கட் ராமன் தன் மகளை முதுகில் அமர்த்தி யானை போல வலம் வர அருகில் அம்மா நிஷா குழந்தையை கையில் பிடித்திருக்கிறார்.

Comments are closed.