மேடையில் நடனமாடும் ஜோதிகா… சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்! மிக அரிய காட்சி!!

தல அஜித் பொதுநிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உடன் கலந்துகொண்டது தான் கடைசி என்பது பெரும்பாலும் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.தற்போது தனது படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி என்றாலும் விருது வழங்கும் விழா என்றாலும் எதற்கும் அஜித் வருவதில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அஜித் விழா ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த விழாவில் கேப்டன் பக்கத்தில் தான் அந்த அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஜோதிகா காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ‘உயிரின் உயிரே’ பாடலை மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.அதனை கீழே இருந்து அஜித், சூர்யா, சிம்பு போன்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அஜீத், சூர்யாவிடம் ஏதோ கூற, அதற்கு சூர்யாவும் வெட்கத்தில் சிரிக்க, அஜித்தும் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார்.

இதை பார்க்கும்போது கண்டிப்பாக அஜித், சூர்யா ஜோதிகாவின் காதல் குறித்து தான் ஏதோ கமெண்ட் அடித்து இருந்திருப்பார் என்று ரசிகர்கள் கூறிவருவதோடு, மிகவும் அரிய காட்சி என்று தற்போது இதனை தீயாய் பரப்பி வருகின்றனர்

Comments are closed.