குடும்பத்தை விட்டு தவித்த நடிகை…. 20 வயதில் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அ-ழுத சோ-கம் !…. இதுவரை யாரும் அறியாத ரகசியங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என் காலை பிடிக்க தயங்கி அந்தக் காட்சியை வேண்டாம் என்று கூறியதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். நடிகை ஷோபனா திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.ம இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளங்களின் நடிப்பில் உருவான தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காதலியாக முக்கியமான கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தொடர் படப்பிடிப்பு காரணமாக வீட்டிற்கு மணிரத்தினம் அனுப்பவில்லை என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே அழுதுள்ளார்.

அப்பொழுது ஷோபனாவுக்கு வெறும் 20 வயது மட்டுமே நிறைவடைந்த நிலையில் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என ஏக்கத்துடன் இருந்த ஷோபனாவிற்கு நடிகர் மம்முட்டி ஆதரவாகப் பேசி சமாதானப்படுத்தி உள்ளார்.மேலும் பேசிய அவர், ரஜினியுடன் மீண்டும் இணைந்து “சிவா” படத்திலும் ஷோபனா நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் ஷோபனாவை பார்க்க வீட்டின் மேற்கூரையை திறந்துகொண்டு உள்ளே படுத்திருக்கும் ஷோபனாவின் கால்களை பிடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தாகவும், ஆனால் ரஜினிகாந்த் அந்த காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க தயங்கியதால் அந்தக்காட்சியே வேண்டாம் என்று சொன்னார்.

மேலும் அவ்வாறு காலை பிடிக்கும் காட்சியில் நடித்தால் என்னுடைய ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பிடிவாதமாக ரஜினிகாந்த் இருந்ததாகவும், பின்னர் ஒரு வழியாக ரஜினிகாந்தை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் கால்களை பிடிப்பது போன்று படமாக்கப்பட்டதாகவும் கூறினார்.

சிவா படம் வெளியான பின்பு ரஜினிகாந்த் சொன்னதைப் போலவே அவரது ரசிகர்கள் சோபனாவின் காலை பிடிக்கும் அந்த காட்சியை விரும்பாத ரசிகர்கள் ” தலைவா நீ போய் அவளோட கால பிடிக்கலாமா ” என தியேட்டரில் அந்த காட்சி வரும்போது பலரது எண்ண ஓட்டங்களை வெளிப்படையாக கூறினார்கள் என்று இதுவரை யாரும் அறியாத பல சுவாரசியமான தகவல்களை ஷோபனா வெளிப்படுத்தி பழைய நினைவுகளை மீட்டியுள்ளார்.

Comments are closed.