கடும் வக்ரமடையும் சனி பகவான்…! யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க போகிறாரோ..? எந்த ராசிக்கு ஏழரை சனி காலம் தெரியுமா.?

சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். மே மாதம் 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை மகரத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். இந்த சனி வக்ர நிலையில் இருக்கும் போது சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும்.

சனி வக்ரத்தினால் பாதிப்பு குறைய பறவைகள், விலங்குகள், ஆதரவற்ரோர், ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் செய்யலாம். சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.  சனிபகவான் ஆயுள்காரகன், ஜீவன காரகன், நீதி, நேர்மை தெய்வீக ஞானத்திற்கும் அதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் அவர் சுறுசுறுப்பாக இருப்பார். நீசமடைந்தோ, பலம் குன்றியோ இருந்தால் மந்தநிலையில் செயல்படுவார்கள். சனி ஏற்கனவே மெதுவாக நகரும் கிரகம். வக்ரம் பெற்றால் சனிபகவான் இன்னமும் மெதுவாக நகர்வார்.

சனி வக்ரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். சனி வக்ரமடைந்து சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் குரு பகவானும் சில மாதங்கள் வக்ரமடைகிறார். சுக்கிரன், புதன் கிரகங்களும் வக்ரமடைகின்றனர். மொத்தத்தில் இந்த கால கட்டத்தில் நான்கு கிரகங்கள் வக்ரமடைந்து பின்னர் நேர் கதிக்கு திரும்புகின்றன. இன்றைக்கு நாம் சனி வக்ரமடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவானால் வேலை, தொழிலில் நிறைய பிரச்சினை ஏற்பட்டது. சனி வக்ரமடைவதால் இனி மேஷம் ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த மந்த நிலை மாறும். பண வரவு அதிகரிக்கும். சனி வக்ரத்தில் இருக்கும் இந்த 140 நாட்களும் உங்க வேலையில் இருக்கும் மந்த நிலை மாறும். மிகவும் உற்சாகமாக வேலையை தொடங்குவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டகரமான கால கட்டம். இந்த கால கட்டத்தில் வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வருங்காலத்திற்கு தேவைப்படும். அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுப விரையங்கள் ஏற்படும். கடன்களை திருப்பி கொடுப்பீர்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அஷ்டமத்து சனி ஆட்டி படைத்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி சனி ஒன்பதாம் வீட்டிற்கு போனதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டீங்க. இப்போ சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்க பெர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். சனி வக்ரம் பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த முதலீடுகளையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக இருந்து கவலை கொடுத்த சனி பகவான் அஷ்டமத்து சனியாக மாறி ஆட்டிப்படைக்கிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுக்கும். வேலை தொழிலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். கூட்டுத்தொழில் நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. முன் யோசனையின்றி பேசிவிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க

கடகம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த நிலையில் சில மாதங்களாக கண்டச்சனியாக சில சங்கடங்களை கொடுத்து வந்தார் இனி வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் குறையும். எதிரிகள் தொல்லை குறையும், மறைமுக போட்டி பொறாமைகள் குறையும். இந்த 140 நாட்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். உங்க நிதி நிலமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். வம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும். இந்த கால கட்டத்தில் சேமித்து பழகுங்கள்.

சனி பகவான் இப்போது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு திறமை பளிச்சிடும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். சனி வக்ரமாக இருக்கும் 140 நாட்களும் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம சனியால் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். உங்களுக்கு சனி பகவான் வக்ர காலகட்டத்தில் சஞ்சரிக்கிறார். மே 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையிலான இந்த கால கட்டத்தில் நீங்க உங்களுக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அம்மா வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் இப்போதைக்கு வேண்டாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கடந்த ஏழரை ஆண்டுகாலமாகவே ஏழரை சனியால் சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள், பாதிப்புகள் தீரும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கடன் வாங்காதீங்க.

தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனியில் பாத சனி காலம். உடல் நல பிரச்சினை, செலவுகள் ஏற்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் இந்த கால கட்டத்தில் சனி வக்ரமடைகிறார். ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் பாதிப்பு வருமே என்று நினைக்காதீங்க உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் புதிய பிசினஸ் செய்யலாமா என்று நினைப்பீங்க பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் செய்யாதீங்க. வீட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க குறிப்பா உங்க கால்கள், பாதங்களில் கவனமாக இருங்க

மகரம் ராசிக்காரர்களுக்கு இது ஜென்ம சனி காலமாகும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம். கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் கவனமாக இருங்க. சனி உங்க ராசி அதிபதி ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு பண பிரச்சினை வரலாம். உடல் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனமாக இருங்க. தாய் வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வச்சிக்காதீங்க. வேலை விசயத்தில் கவனமாக இருங்க. எந்த சூழ்நிலையிலும் இப்போதைக்கு புது வேலைக்கு மாற வேண்டாத்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனி காலமாகும். விரைய செலவுகள் நிறைய வரும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். சின்னச் சின்ன உடல் நலப்பிரச்சினைகள் வரலாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீடு திரும்ப வருமா என்ற யோசனை எழலாம். கவலை வேண்டாம் உங்க பணம் பத்திரமாக இருக்கும். பங்குச்சந்தைகளில் இந்த கால கட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலம். சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியரீதியாக சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாம். திடீர் பண வருமானம் வரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து விடுங்கள்.

Comments are closed.