வாத்தி கம்மிங் பாடலுக்கு அம்மாவுடன் சேர்ந்து குட்டி ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பிரகதி!… வைரலாகும் வீடியோ…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.  இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தளபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஸ்டைலில் நடனமாடி அசத்தி வரும் நிலையில், பிரகதியும் அவருடைய அம்மாவுடன் சேர்ந்து ஒரு குட்டி ஆட்டம் போட்டுள்ளார்.

உண்மையிலேயே மிகவும் வித்தியாசமான முயற்சியாகவே இவருடைய இந்த பாடல் வீடியோ அமைந்துள்ளது. மேலும் அவருடைய அம்மாவின் பர்பார்மென்சும் சும்மா அள்ளுது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

🙏🏽 —> 🥻 #vaathicoming ⁣ Wearing @heybootiful_hq & @kancheevaram_weaves_by_zobha

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

Comments are closed.