கொ ரோ னாவில் இருந்து குணமடைந்த மருந்துகளை வெளியிட்ட நடிகர் விஷால்.. என்ன கூறியுள்ளார்?

இந்தியாவில் கொ ரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கொ ரோ னா பரவி வருகிறது. அந்த வகையில், நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டதாகவும், ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டதால் தான் குணமடைந்திருப்பதாகவும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, தற்போது விஷால் தனது ட்விட்டர் பதிவில், “மருந்து விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு பலர் கோரிக்கை வைத்து வந்தனர். கொ ரோ னா தொற்றிலிருந்து குணப்படுத்திய மருந்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.

தயவு செய்து மருத்துவரின் ஆலோசனைகளை பெறுங்கள். அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்து கடைகளில் இவை கிடைக்கும். மீண்டும் எனக்கு மருத்துவம் பார்த்த டாக்டருக்கு எனது நன்றி” என்று கூறி மருந்துகளையும் பட்டியலிட்டுள்ளார் விஷால்.

முன்னதாக தனக்கு தனது தந்தை மூலம் தனக்கு கொ ரோனா தொற்று பரவியதாகவும், தற்போது தனது தந்தை கொ ரோ னா வுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்த விஷால், தனது மேலாளர் ஹரி என்பவருக்கும் கொ ரோனா தொற்று இருப்பதாக வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.

Comments are closed.