பேரனுடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்த சூப்பர் ஸ்டார்! புதிதாக வெடித்த ச ர்ச்சை….. சிக்குவாரா ரஜனி ??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கொரோனா காலத்தில் சூப்பஸ்டார் எங்கு சென்றார் என்ற ஒரு கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இளைய மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் E – Pass வாங்கினாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

அதற்கு பதிலளித்த அவர், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு E – Pass தேவை என்பது கட்டாயமாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தில் E _ Pass வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இது குறித்த புதிய ச ர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரஜனி தரப்பில் இருந்து இதுவரை பதில்கள் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.