படப்பிடிப்பு தளத்தில் விஜய் சங்கீதா திருமண கொண்டாட்டம் கலந்து கொண்ட அஜித் மனைவி ஷாலினி தற்போது தீயாய் பரவும் புகைப்படம்!!!

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்டவர்கள் தான் அஜித், விஜய்… இவர்கள் இருவரும் என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும், இவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அஜித் பெருசா?.. விஜய் பெருசா?.. என்ற மோ தலே… ஆனால் உண்மையிலேயே இவர்களுக்கு மனஸ்தாபம் என்ற பேச்சிற்கு இடமே இல்லை என்று தான் கூற வேண்டும்.விஜய் திருமணத்திற்கு பின்பு ஷாலினி விஜய்க்கு என்ன செய்தார்?.. என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.நடிகர் விஜய் ஷாலினியுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் திருமணத்தில் அஜித், ஷாலினி இருவரும் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு பரிசினையும் கொடுத்தனர்.

அதே போல் விஜய்யின் திருமணத்தின் போது கண்ணுக்குள் நிலவு படத்தினை விஜய்யுடன் நடித்து வந்துள்ளார் ஷாலினி. திருமணம் முடிந்து படக்குழு இவர்களுக்கு சிறிய விருந்து ஆயத்தப்படுத்தியது. இதில் இயக்குனர், நடிகர் சார்லி மட்டுமல்ல ஷாலினியும் கலந்து கொண்டார். அனைவரும் விஜய்யைப் பற்றி பேசிய பொழுது ஷாலினியும் விஜய்யைப் பற்றி ஒருசில வார்த்தை பேசினார்.

அப்போது விஜய்யுடன் நடிக்கும் பொழுது நான் மிகவும் சவுகரியமாக உணர்கிறேன் என்றும் குழந்தை நட்சத்திரமான நடித்து எனது முதல்படம் அவருடன் தான் என்றும் தெரிவித்து பரிசு ஒன்றினையும் அவருக்கு வழங்கியுள்ளார்.

Comments are closed.