நிஜமான திருமண வீடியோவை வெளியிட்ட காமெடி நடிகர் சதீஷ்…!!! பார்த்தவுடன் ஷாக் ஆகி கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!!
காமெடி நடிகர் சதீஷ் இவர் தமிழ் படம் என்ற அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா நடித்த படத்தில் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இவர் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே நடிக்க வருவதற்கு முன் சிவகார்த்திகேயன் சதீஷ் இருவரும் ஒரு சில குறும் படங்களில் நடித்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவையும் கொஞ்சமாக இருக்கிறது நகைச்சுவை நடிகர்களும் பஞ்சமாக இருப்பதால் சதீஷ்க்கு எளிதாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவையின் மன்னன் கவுண்டமணி மற்றும் செந்தில் இல்லாத நேரத்தில் வைகைப்புயல் வடிவேலு நம்மை சிரிக்க வைத்தார்.
வைகைப்புயல் இல்லாத நேரத்தில் சந்தானம் நம்மை சிரிக்க வைத்தார் தற்பொழுது சந்தானம் இல்லாத நேரத்தில் சூரி, யோகி பாபு மற்றும் சதீஷ் இவர்கள்தான் சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் காமெடி வைகைப்புயல் வடிவேல், சந்தானம் மற்றும் செந்தில்- கவுண்டமணி அவர்களின் நகைச்சுவைக்கு ஈடாக இல்லை என்றாலும் தற்போதைக்கு ஒரே ஆறுதல் இவர்கள் மூவர் தான்.
சதீஷ்க்கு நீண்ட நாட்களாக பெண் தேடி வந்தனர் அவர் குடும்பத்தினர். “பைரவா” பட பூஜையில் கீர்த்தி சுரேஷும் சதீஷும் மாலையணிந்து ஒன்றாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்று வைரலானது. அதன்பின் கீர்த்தியும் சதீஷும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவியது அதுமட்டுமல்லாமல் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் தீயாய் பரவியது. அது வதந்தி என்று தெரிந்தாலும் கிண்டல் காகவே சதீசை கலாய்க்க செய்தனர் ரசிகர்கள்.
ஒருவழியாக மொத்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சதீஷ் பெற்றோருக்கு பார்த்த பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல மாதங்கள் கழித்து இன்று திருமண வீடியோவில் ஒரு கிளிப்பிங் வெளியிட்டார் சதீஷ். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன தல ஆடி மாசம் வந்தா தான் பொண்டாட்டி அருமை தெரியுதா என்று செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.
😍🙏🏻😍🙏🏻 pic.twitter.com/AU81o9Hqor
— Sathish (@actorsathish) July 17, 2020
Comments are closed.