இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு குழந்தை பிறந்தது!என்ன குழந்தை தெரியுமா.!

தமிழில் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் தான் ஜி.வி.பிரகாஷ்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.!இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார்.ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.வெயில் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.


பின் பொல்லாதவன்,அங்காடி தெரு,ஆயிரத்தில் ஒருவன் என தொடர்ந்து அணைத்து சினிமா பாடல்களும் ஹிட் ஆகா முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக முன்னேறினார்.கடைசியாக வந்த அசுரன் திரைபடத்தை பற்றி கேட்கவே தேவை இல்லை,அணைத்து பாடல்களும் மெகா ஹிட்.


பின்னர் யாருக்கு தான் நடிகராக ஆசை இருக்காது அது போல் தான் டார்லிங் திரைபடத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பம் ஆனார்.


ஆனால் பிறகு வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றி பெற முடியாமல் போனது.தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.


இரண்டு பேரும் இசைக்குடும்பத்தை சார்ந்தவர்கள். ஜிவி இசையில் சைந்தவி பாடும் பாடலுக்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.


தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஜிவி செம்ம சந்தோஷத்தில் உள்ளார்.அவர்களும் பெண் குழந்தை தான் வேண்டும் என ஆசையுடன் இருந்தனராம்.இது அதிர்ஷ்டம் என்பது.!

Comments are closed.