ஷாஜகான் படத்தில் விஜயின் நண்பராக நடித்த நடிகர் கிருஷ்ணா யார் தெரியுமா

பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான முழுநீள காதல் திரைப்படம் ஷாஜகான். படம் சுமாராக போனாலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. தான் விரும்பிய காதலி தன் நண்பனை விரும்புவது தெரிந்த பின்னர் அவர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய்.

2001-ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் விஜய், ரிச்சா பலோட், கிருஷ்ணா, சோனா, விவேக், தாடி பாலாஜி, கோவை சரளா, நிழல்கள் ரவி, பாண்டு, தேவன் உட்பட பலர் நடித்திருந்தனர் மணி ஷர்மா படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் கதைப்படி விஜயின் நண்பர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் கிருஷ்ணா என்பவர் நடித்திருப்பார். ஷாஜகான் படத்தை தவிர இவர் பிரியாத வரம் வேண்டும், சென்னயில் ஒரு காதல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கேரளாவை சேர்ந்தவரான நடிகர் கிருஷ்ணா 1997-ம் ரிஷ்யஸ்ரீங்கன் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் மலையாளத்தில் மட்டும் 40-படங்களில் நடித்துள்ளார். இது தவிர பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகர்களான வினித் மற்றும் ஷோபனா ஆகியோர் நடிகர் கிருஷ்ணாவின் உறவினர்கள் ஆவர். மேலும் பழம்பெரும் நடிகைகளான பத்மினி-ராகினி-சுகுமாரி ஆகியோரும் இவருக்கு அத்தைகள் முறை என்பது குறிப்பிடதக்கது.

 

Comments are closed.