பிரபல நடிகையாக இருந்தா மோனிகா என்ன ஆனார் தெரியுமா.? திடீரென காணாமல் போக என்ன காரணம் தெரியுமா.!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அவசர போலீஸ் 100 மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாருதி ராஜ் என்கிற மோனிகா.1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாக புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். அழகி திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப் பட்டது. அதன் பின் பகவதி, சண்டைகோழி போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார். இவரது இயற் பெயர் மாருதி ராஜ். ஆனால், திருமணத்திற்காக பெயர் பெயரை மோனிகா என்று மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் மலையாள படத்திற்காக தனது பெயரை பர்வான என்றும் மாற்றிக்கொண்டார்.

முதலில் இந்துவாக இருந்த மோனிகா 2010 ம் ஆண்டு முதல் இஸ்லாம் மதத்தை கடைபிடித்ததால் 201௪ ம் ஆண்டு தன்னை முழுவதுமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றி கொண்டார்.பிறகு தனது பெயரை எம்.ஜி.ரஹிமா என மாற்றிகொண்டார்.

பின்னர் 2015ம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.மாலிக்கை திருமணம் செய்துகொள்த்தான் நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று பின்னர் தெரிய வந்தது.

திருமணதிற்கு  பின் நடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மோனிகா மாயமானார். சில இயக்குனர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்ட போது நடிப்பில் இருந்து விலகியதாக கூறியுள்ளார். அதன் பின் மீடியாக்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தவில்லை. அது மட்டுமின்றி எந்த ஒரு நிகழ்சிகளிலும் மோனிகா கொள்வதில்லை.

மோனிகா கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற திரைபடத்தில் நடித்திருப்பார்,.இது தொடர்பாக மோனிகாவின் நெருங்கிய தோழிகளிடம் விசாரித்த போது மோனிகா திருமணத்தின் பின் எங்களோடும் அதிகம் பேசுவதில்லை. எங்கு இருக்கிறார் என சரியாக தெரியவில்லை என கூறியுள்ளார்கள். ஒரு சில தோழிகளுக்கு மட்டும் கால் செய்வதாக கூறுகிறார்கள்..!

Comments are closed.