80களின் நடிகை சரிதாவுக்கு இவ்வளவு அழகிய இரண்டு பெரிய மகன்களா!! அட இந்த படத்தில் நடித்த நடிகர்தான் சரிதாவின் மகனா!!!

1980ல் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. குடும்ப பாங்கான இவரது நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் இருக்கும். தெலுங்கில் பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 16 வயதாக இருந்தபோது வெங்கட சுப்பையா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இது 6 மாதம் கூட நீடிக்கவில்லை. பின்னர் தீவிரமாக படங்களில் கவனம் செலுத்திய சரிதா பின்னர் 1988ல் மலையாள நடிகர் முகேசை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து வந்தார். ஆனால் முகேசோ மிதுல் தேவிகா என்ற பரதநாட்டிய கலைஞரை திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து சரிதா கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டு விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்குகளில் முகேஷ் மட்டும் ஆஜராகவில்லை.

இதனால் நடிகை சரிதா தனது இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு துபாய் சென்று விட்டார். அங்குதான் தற்போது மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சரிதாவின் மகன் ஷ்ரவண் முதன்முறையாக கல்யாணம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் . இந்த படத்தில் சரிதாவும், முகேசும் நடித்தார்கள். இந்த படத்தின் பூஜைக்கு இருவரும் வந்திருந்தனர்.

அப்போது இருவரும் மனம் திறந்து பேசியதாக கூறப்படுகிறது. எனவே மகன்களின் எதிர்கால நலன் கருதி இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கருதியதாக கூறப்படுகிறது. எனவே இருவரும் 6 வருடங்களுக்கு பிறகு சரிதா கணவருடன் இணைகிறார்.

Comments are closed.