தமிழ் திரைப்பட காமெடி நடிகர்களின் மகன்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா!! அவரகளும் திரைப்பட நடிகர்களா!!

சினிமாவில் காமெடி காட்சிகளில் நடித்து கவலையை எல்லாம் மறக்கப்பவர்கள் நகைச்சுவை நடிகர்கள். இவர்களின் வாரிசுகளில் சிலரை பற்றி பார்ப்போம். நகைச்சுவை நடிகர் அனுமோகனின் மகன் அருண் மோகன். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.
மயில்சாமியின் மகன் பெயர் அன்பு. இவர் விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். மனோபாலாவின் மகன் ஹரி கிருஷ்ணா, இவர் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக உள்ளார்.மணிவண்ணனின் மகன் பெயர் ரகுவண்ணன். இவர் இப்போது சினிமாவில் நடிகராக உள்ளார். கருணாசின் மகன் கென் கருணாஸ். இவர் கடந்த வருடம் வெளி வந்த அழகு குட்டி செல்லம் படத்தில் நடித்தார்.

செந்திலின் மகன்களின் பெயர் மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு. இதில் பல் டாக்டரான மணிகண்டபிரபு சாலி கிராமத்தில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். டெல்லி கணேசின் மகன் பெயர் மகாதேவன் கணேஷ். இவர் கடந்த வருடம் என்னுள் ஆயிரம் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை தயாரித்தவர் டெல்லி கணேஷ்.

பாண்டுவின் மகன்களின் பெயர் பிங்கு பாண்டு, பிரபு, பஞ்சு பாண்டு. பிங்கு பாண்டு 2013ம் ஆண்டு நடித்து வெளிவந்த வெள்ளச்சி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மற்ற இருவரும் வெண்கலம் மற்றும் பித்தளை சம்பந்தமான தொழிலை செய்து வருகின்றனர். சிங்க முத்து மகனின் பெயர் வாசன் கார்த்திக். இவர் இதுவரை 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Comments are closed.