வெளியானது பிக் பாஸ் 4 வது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…? போட்டியாளர்கள் விவரம் இதோ..! ரசிகர்கள் குஷி…!!

வெளியானது பிக் பாஸ் 4 வது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…? விவரம் இதோ..! ரசிகர்கள் குஷி…!! பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியானது ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளிலும் நடத்தப்படுகின்றது. இதன் தமிழ் பதிப்பானது ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியினை நெதர்லாந்தின் எண்டெமோல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிகழ்ச்சியானது தற்போது மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது இதன் முதல் சீசனானது ஸ்டார் விஜயில் 2017 ஆம் ஆண்டு ஜுன் 25 அன்று ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனில் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 வது சீசனில் 17 வது போட்டியாளர்களும், 3 வது சீசனிலும் 17 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். முதல் சீசனில் ஆரவ் முதல் இடத்தினையும், சினேகன் இரண்டாவது இடத்தினையும் பெற்றனர். அடுத்து 2 வது சீசனில் ரித்விகா முதல் இடத்தினையும், ஐஸ்வர்யா தத்தா இரண்டாவது இடத்தினையும் பெற்றனர்.

3 வது சீசனில் முகென் ராவ் முதல் இடத்தினையும், சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தினையும் பெற்றனர். இந்தநிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான 4 வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது பிக் பாஸ் 4 வது சீசனுக்கான போட்டியாளர்கள் விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 4வது சீசன்: சீரியல் நடிகர் ஈஸ்வர்ம, நடிகர் சாய் சக்தி, நடிகை ஜெயஸ்ரீ, நடிகர் விமல், ரியோ ராஜ், ராதா ரவி, விசித்ரா, தேவயாணி, தொகுப்பாளினி ரம்யா, ரட்சிதா, டிடி, சின்மயி, வர்ஷா பொல்லம்மா, ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சஞ்சனா சிங், நடிகர் ஸ்ரீமன்..

ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் குறித்து பேராவலில் உள்ளனர்.

Comments are closed.