அழகி படத்தில் நடித்த சிறுவயது பார்த்திபனா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.?அட பாவமே.!

அழகி படத்தில் நடித்த இளம் பார்த்திபன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரின் நிலை என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர்பச்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அழகி. இப்படத்தில், நடிகர் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப் படத்திற்கான பிலிம்பேர் விருதையும் இந்த படம் பெற்றது. அழகி படத்தில் சிறு வயது நந்திதா தாஸுக்கு காதலனாக சிறு வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ்.

இவர், அழகி படத்தை தொடர்ந்து இயக்குநர் சேரன் இயக்கத்தில், சொல்ல மறந்த கதை படத்தில் சேரனுக்கு தம்பி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் சிறிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகர் சதீஷ் பேசியுள்ளார். அதில், கடந்த வருடம் வெளியான கூட்டாளி படத்தில் நடித்துள்ளேன், ஆனால் அந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. குறித்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. வாய்ப்புகள் எதுவும் தற்போது வரவில்லை,

இந்நிலையில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி உள்ளார் அழகி நாயகன் நடிகர் சதீஷ்.

தற்போது இருக்கும் அழகி நடிகர் சதீஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பிறகு ஆவது படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதா?? என்று பார்க்கலாம்.

Comments are closed.