மேடையில் ஒட்டு மீசை கீழே விழுந்ததால் தலை தெறிக்க ஓடிய கார்த்தி.! என்ன ஆச்சுனு பாருங்க.!

கார்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு MS டிகிரிக்காக அமெரிக்காவிற்கு சென்றவர். தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய கார்த்தி பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.கார்த்தி இயக்குனர் அமீரின் “பருத்திவீரன்” படத்தில் அறிமுகம் ஆனார். சூர்யா தனது தம்பியை முதல் படத்தில் அறிமுகப்படுத்தினார். “பருத்திவீரன்” முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது. அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற செல்வராகவனின் படத்தில் நடித்து அதிலும் வெற்றியை பெற்றவர். முதல் படத்தில் கிராமத்து கதை களத்தை தேர்ந்து எடுத்த கார்த்தி.

தனது மூன்றாவது படமான லிங்குசாமியின் “பையா” படத்தில் சிட்டி இளைஞராகக் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்களை பூர்த்தி செய்யும் படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் கார்த்தி. சமீபத்தில் அவர் நடித்து வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று”, “கடைக்குட்டி சிங்கம்”, “கைதி” போன்ற அப்படங்கள் இவருடைய மார்க்கெட்டை பெரிதாக்கி கொடுத்தது.

சில வருடங்களுக்கு முன் நடிகர் கார்த்தி, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் உருவான சரித்திரக் கால திரைப்படம் காஷ்மோரா. இரு கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படம், தீபாவளி அன்று வெளியாகியது.

இப்படம் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவிளும் வெளியானது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் அப்பொழுது நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கார்த்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் ஒட்டு மீசை நழுவ தொடங்கியது. அது தெரியாமல் அவர் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்.

எனவே, யாரோ ஒருவர் அதை அவருக்கு சைகையால் உணர்த்த, சுதாரித்த கார்த்தி அந்த ஒட்டு மீசையை கைகளால் ஒட்ட முயன்றார். ஆனாலும் சரியாக பொருந்தவில்லை. இது, பார்வையாளர் மத்தியில் அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

எனவே, தனது பேச்சை நிறுத்திவிட்டு, மீசையை ஒட்டுவதற்காக மேக்கப் அறைக்கு சென்று விட்டார். இந்நிலையில், காஷ்மோரா தொடர்பான விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் கார்த்திக் மீசையை மழித்த நிலையில் மேடையேறினார்.

ஏற்கனவே ஏற்பட்ட தர்மசங்கடமான நிலைமை, மீண்டும் ஏற்படாதவாறு கார்த்தி ஜாக்கிரதையாக நடந்து கொண்டதை விழாவில் பங்கேற்றோர் சுட்டிக்காட்டினர்.அந்த வீடியோ கீழே பாருங்கள்.!

Comments are closed.