அருந்ததி படத்தில் வந்த குட்டி அனுஷ்காவா இது!… இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா நீங்களே பாருங்க

பிரபல நடிகை அனுஷ்காவுக்கு திருப்புமுனையாய் அமைந்த படம் ”அருந்ததி”.அவரது திறமையான நடிப்பாலும், மி ர ட்டலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.இந்த படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்தவர் திவ்யா நாகேஷ், மும்பையில் 1988ம் ஆண்டு நடித்த திவ்யாவின் குடும்பம் சிறுவயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆனது.திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த திவ்யா, சென்னையில் படிக்கும் போது அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார்.ஒருநாள் காய்ச்சல் காரணமாக மைதானத்தில் அமர்ந்திருந்த போது, அங்கே தெலுங்கு சீரியலின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

திவ்யாவை பார்த்த அந்த சீரியலின் இயக்குனர், நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார், தொடர்ந்து திவ்யாவின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று தெலுங்கு மற்றும் தமிழ் விளம்பர படங்களில் நடித்தார். தமிழில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக, அது ஒரு கனா காலம், ஜில்லின்னு ஒரு காதல், பொய் போன்ற ஏராளமான படங்களில் நடித்தார்.

இதுவரை தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்த திவ்யா, தமிழில் ஹீரோயினாக நடித்தாலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியாக தமிழில் இறுதியாக தேடினேன் என்ற படத்திலும், தெலுங்கில் வஸ்தவம் என்ற படத்திலும் நடித்த திவ்யாவுக்கு கதாநாயகியாக இன்னும் வெற்றிக்கனி எட்டாக்கனியாகவே இருக்கிறது!!!

 

Comments are closed.