விவசாயம் செய்யும் நடிகை கீர்த்தி…!!! இது வரை எந்த நடிகையும் இந்த மாதிரி செய்திருக்க வாய்ப்பில்லை குவியும் பாராட்டுக்கள்!!

கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் மகள். எப்படியாவது தனது மகளை ஹீரோயினாக ஆக்க வேண்டும் என்ற வைராக்யத்தில் கீர்த்தியை “தும்பா” என்ற படத்தில் அறிமுகம் செய்தார் அருண் பாண்டியன். அந்த படத்திற்கு ஓரளவு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அதன் பின் சரியான கதையை தேர்ந்து எடுத்து நடிக்க உள்ள கீர்த்தி தற்பொழுது ஊரடங்கின் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வு நேரத்தை வீண் செய்யாமல் எப்படி போக்குவது என்று யோசித்த கீர்த்தி தனது தந்தையின் சொந்த வயல் ஒன்றில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் ட்ராக்ட்டர் ஒன்றை உழுதுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டார் கீர்த்தி அந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது வயலில் இறங்கி பெண்களுடன் ஒன்றாக சேர்ந்து நாத்து நட்டு வருகிறார் கீர்த்தி.

நான் கொரோனா ஊரடங்கை மீறவில்லை இது எனது தந்தையின் சொந்த இடத்தில் தான் இதனை செய்கிறோம். பொது இடத்தில் செய்யவில்லை என்று பதிவிட்டு இருந்தார்.

Comments are closed.